உயிர் தீயாகும் நீ....

அடர்ந்த இருட்டிலும்
நிழலானாய்...
ஆழ்ந்த நிசப்தத்திலும்..
காற்றசைவாகினாய்...
என் மனக்குரலின் கவிதையாகி
என்னுள் உயிர் தீயாகியும்
நின்றாய் நீ.
தமிழே !

கவிதாயினி. மதி.
குறிஞ்சிப்பாடி.

9715969189.
ஊனம் ஒரு நல் அழகே!

படைப்புகளில் இவர்கள் வித்தியாசம்
என்பதால், ஊனத்திலும் இவர்கள்
சாதனையாளர்கள் என்பதால்
ஊனமும் ஒரு நல் அழகே.

பலவீனம் உடல் உறுப்புகளில்
ஆனால் பலமோ மனதில்
சிந்தை பலத்தால் ஜெயித்துக் காடுவதால்
ஊனம் ஒரு நல் அழகே!

கண் இல்லாமல் பார்க்கிறார்கள்
செவிப்பலம் இன்றிக் கேட்கிறார்கள்
பாஷை இல்லாமல் பேசுகிறார்கள்
பலம் இல்லாம்லேயே வாழ்கிறார்கள்.

கரங்கள் இன்றி படைக்கிறார்கள்
சிறகு இன்றி சிந்தையால் பறக்கிறார்கள்
கால்கள் இல்லாமல் நடக்கிறார்கள்
வாழ்வு இழந்தும் வாழ்கிறார்கள்

அசாதாரண வாழ்வு வாழ்வதால்
பிறர் சந்தோஷத்தில் தம் சந்தோஷத்தை
காண்பதால், குறையை நிறைவாய்
கொள்வதால் இவர்களும் அழகே.

இறை அருள் இருக்கும்வரை
நல்ல பெற்றோர் இருக்கும்வரை
அருமையான உறவுகள் இருக்கும்வரை
இனிய உடன்பிறப்புகள் இருக்கும்வரை

வழிநடத்தும் ஆசான்கள் உள்ளவரை
உயிர்தரும் நண்பர்கள் உள்ளவரை
வழிகாட்டும் வள்ளல்கள் உள்ளவரை
ஊனத்தை மதிக்கும் உள்ளங்கள் உள்ளவரை

ஊனம் ஒரு நல் அழகே!
உரிய உரிமைகளை தந்து
சமூகம் இவர்களை அங்கீகரித்தால்
ஊனமும் ஒரு நல் அழகே!

உற்றுப்பார்த்தால் ஒளிந்திருக்கும்
திறமைகள் திரியும் உயர்வு தந்து
பார்த்தால் ஊனத்தின் உன்னதம் புரியும்
ஊனமும் ஒரு நல் அழகே புரியும்.

-கவிதாயினி। சாந்தி ராபர்ட்ஸ்
உதகை.

மலர்கள்

அரும்புகளில் மட்டுமின்றி அந்திமக்காலம் வரை
அழகழகாய்த் தோன்றி அசத்தும் அபூர்வங்கள்.

கடவுச்சீட்டாக காதலர்க்குப் பயன்படினும்
கடவுளரின் பூசனைக்கும் கடன்பட்டவைகள்


வண்ணங்களாலும் வடிவங்களாலும் வழிமறந்து
வாண்டுகளை வசீகரிக்கும் வரவேற்பு வளைவுகள்

இனவிருத்திக்கு இடம்கொடுக்கும் இயல்பினினால்
இம்மியளவும் மனவருத்தமின்றி மறைபவைகள்

வாடிஉதிரும் வரை வாசம் வீசும் வழக்கத்தினை
வாடிக்கையாய் வைத்து வாழ்ந்து காட்டுபவைகள்


கவிஞர்களின் கற்பனைக்குக் கைகொடுப்பதோ
கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்படுபவைகள்

மனிதர்களின் மரணத்துக்கு மெளனாஞ்சலி செலுத்த‌
மணிக்கணிக்கில் காத்திருக்கும் புனித ஆத்மாக்கள்

சுபகாரியங்களிலும் சுற்றாத்தார் போல் வந்து
சுற்றிச்சுழன்றபடி சுகராகம் பாடுபவைகள்

இறைவனுக்கும் புலவனுக்கும் இடையே வந்து
இலக்கண சர்ச்சைக்கு இலக்கானவைகள்

மென்மையிலே மெல்லியலார்க்கு உவமையானாலும்
மென்மேலும் மே(தி)னியை மேன்மைப்படுத்துபவைகள்.


கவிஞர்। கலைமதிராஜன்.
கோவை.

9842535675

அம்மா!

'வாரமொரு முறை கடிதம்'
'மாதமொரு முறை பணவிடை'

'அடிக்கடி தொலைபேசி உரையாடல்' இவை முழுவதுமாய் மறந்த
நினைவை

அவசரமாய் நினைவூட்டுகிறது

அம்மாவின் மரணம் குறித்தான்
முதியோர் இல்லத் தந்தி!


கவிஞர்। கன்னிக் கோயில் இராஜா
சென்னை
9841236965

தேடல்!

காலை முதல் மாலைவரை
பல வீடுகளில் வேலை செய்துவரும்

அம்மவின் மாதசம்பளத்தில்

அனைத்து செலவுகளையும் மீறி

சேரும் பணத்தை ஒளித்து வப்பாள்

சாமி படத்திற்கு பின்னால்!

''எளிதாய் எடுத்து குடிக்க வழியில்லாமல்

தேடி எடுக்க வைக்கிறாயே?'' என‌

கோபத்தில் அடிப்பார் அப்பா!


ஒரு நாளும் தேடியதில்லை

வேலையை மட்டும்!


கவிஞர்। கன்னிக்கோவில் இராஜா.
சென்னை.
9841236965

பசியை விரட்டும்
கடவுள்
உழவன்

சிறிய பெட்டிக்குள்
தூஙகும் அக்னி
தீக்குச்சி


ஆசை தோன்றி

மரணம் வந்தது
எய்ட்ஸ்


தொட்டி கட்டினேன்
மழை பொழியவில்லை
நீர் சேகரிப்பு

துலைத்து விட்டேன்

கண்டுபிடித்து தாருங்கள்
சந்தோஷம்

ஒவ்வொரு வீட்டிலும்

இறைவன் வாழ்கிறார்கள்
பெற்றோர்


மழை தந்த‌

அன்பளிப்பு
வெள்ள நிவாரணம்


அக்காவுக்காக

தங்கை மறைந்துக்கொண்டாள்

பெண்பார்க்கும் படலம்.

வீரர்கள் அழவில்லை

ரசிகர்கள் அழுதனர்

இந்தியா தோல்வி.


மெளனமாய் நின்றேன்
அழகாய் பாடியது

தேசிய கீதம்।

கவிஞர். திருசிற்றம்பலம் சுரேஷ்.

கடலூர்.
9944745781

உணர்ந்து கொள்ளாமல்.....

உணர்ந்து கொள்ளாமல்
பகிர்ந்து கொள்கிறார்கள்
ஹேப்பி பொங்கல் என்று....
தமிழ்தாய் அழுது புழம்புகின்றாள்
என்று மாறும் என்று....
தானாய் மாறும் என்பதெல்லாம்
பழைய பொய்யடா....
என் தமிழ் மகனே!நீ
மாற்றிக்காட்டடா!
கவிஞர்எழில்கதிர்
9788784921

இரக்கமின்றி இரத்தமின்றி
நித்தம் பல கொலைகள்
வெட்டப்படும் மரங்கள்

வளம் கொழிக்கும் அரசியல்
வறுமையில் விவசாயம்
வல்லரசாகும் இந்தியா!


ஏற்றம் கண்டுவிட்டோம்
நாமும்
விலைவாசி உ
யர்வு.

வாசல்களே வானமாகி வானவில்லாய்
வர்ணஜாலம் காட்டும்

கோலங்கள்


கவிஞர்। மு. ஆறுமுகம் ரம்யா.
புதுக்கோட்டை.
9842504993.
முத்தமிழும் விளைகின்ற வித்தகத் திருநாட்டில் - கொத்தாய்
நித்தமும் ஆயிரத்தார் வலைகட்கு மீந்தந்து,
முத்துகளும் சிற்பிகளும் சங்குகளை யும்தந்து,
எத்திக்கும் எமைச்சேர்க்கும் அலையார்த்த ஆழியே...!

ஞாலத்தின் முதல் தோன்றி மூத்தக்குடி யென்றாகி - உய்யும்
சீலத்தில் மானத்தில் யாவர்க்கும் வழிகாட்டி,
காலத்தா லின்றைக்குக் கயவர்க்கு உயிரீனுங்
கோலத்தைக் கண்ணுற்றந் தாங்கிடுமோ தமிழுதிரம்!

''அடுத்தவர்க்கு முதலுணவு அடுத்துதான் நமக்குணவு'' - என்றே
எடுத்தோதல் மட்டுமன்று.... நடப்பியல் காட்டுமினம்,
அடுக்காகப் பல்லுயிரை எமனுக்கு உணவாக்கித்
துடிக்கின்ற செய்கையினைப் பார்த்தப்பின்னும் உறங்குவையோ?

ஈழத்தின் மண்ணதிலே இருப்பதெங்கள் இனமடா! - உயர்
வேழத்தின் சீற்றாத்தைக் கொண்டதெங்கள் மனம்டா!
ஆழமாய்த் துயர்கண்டும் அஞ்சாத திண்மடா! - என்றே
ஆழியே அலையுயர்த்து! அவர்மனத்தி லிதைநிறுத்து....

''நல்மனத்தை உற்றாவர்கள் பிறர்நலனைப் பேணுகின்றார்! - மற்றாய்
அல்மனத்தை உற்றவரோ அவர்நலனே பேணுகின்றார்!!
கல்மனத்தார் நாளுமெமைக் காக்கைபோற் சுடுகின்றார்...!
''வல்தமிழர் ஒருசேர்ந்தால் வடுக்கூட இருக்காது!!''

-கவிஞர்। கலைமணி. மா.ஜெ. சசிக்குமார்




வானவில்


வண்டியில் தெறித்தது
பாதையில் மண்ணெண்ணெய்.



மாலை நேரம்

திரும்பிக் கொண்டிருக்கின்றன‌

மேய்ச்சல் கூட்டம்.



சருகை மிதிக்காதீர்

உடைந்துவிடும்
காற்றின் இசை.



உண்பது குப்பையில்

உறங்குவது தெருவில்

கோவில் மாடுகள்.


கவிஞர். தமிழாளி
9750240645
நிலவு....!

வெள்ளைத்
தாமரையில்

பவனிவரும்
பவளக் கொடி...!


மலைமுகடுகளில்
மறைந்துவரும்
தேவலோக‌
தேவதை...!

கருங்கடலில்

மஞ்சள் நீராடும்
இளநங்கையரின்

புதுமைத் தோழி...!

வெள்ளைநிற‌

முக்காட்டில்
வேடிக்கைக் காட்டும்

மாயபிம்பம்.....!

-கவிஞர்।பொன்.முரு.காமராசன்.
திண்டுக்கல். 9952356301.
தமிழா ! இன உணர்வு கொள்.

எழு! எழு! தமிழா விடிவுண்டு - உன்
எதிரிக் கதனால் முடிவுண்டு ‍ - உன்
தொழுத ககளை தூக்கி நிறுத்து
பழுதெலாம் பறக்க சிறகுண்டு - முப்
படையும் போகும் சிதருண்டு!

உனக்குள் உறுதி முளைக்கட்டும் - அதனால்
உரிமைத் தமிழ்நிலம் கிளைக்கட்டும் - அன்றே
பகையும், இரண்டகம் பதுங்கி ஓடும்
மனத்தில் இன்பம் கலைக்கட்டும் ‍ - உன்
மானப் போரில் கதிரெட்டும்!

தன்னலம் அனைத்தும் விட்டுவிடு - வரும்
தடைகள் அனைத்தும் வெட்டிவிடு - நீ
உன்னலம் மறந்து உலக உயிரை
கண்ணின் இமையாய் காத்துவிடு - தோழா
இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு!

துணிவே துணையாய் நினைத்துவிடு - பனித்
துளியாய் துயரை கதிரியிடு - நீ
குனிந்து கிடந்து குற்றம் செய்து
பணிந்து போவதை விட்டுவிடு‍ - புரட்சி
பாதை தெரியுது தொட்டுவிடு!

கவிஞர். புதுவைத் தமிழ் நெஞ்சன்.
புதுச்சேரி.
தமிழா ! இன உணர்வு கொள்.

எழு! எழு! தமிழா விடிவுண்டு - உன்
எதிரிக் கதனால் முடிவுண்டு ‍ - உன்
தொழுத ககளை தூக்கி நிறுத்து
பழுதெலாம் பறக்க சிறகுண்டு - முப்
படையும் போகும் சிதருண்டு!

உனக்குள் உறுதி முளைக்கட்டும் - அதனால்
உரிமைத் தமிழ்நிலம் கிளைக்கட்டும் - அன்றே
பகையும், இரண்டகம் பதுங்கி ஓடும்
மனத்தில் இன்பம் கலைக்கட்டும் ‍ - உன்
மானப் போரில் கதிரெட்டும்!

தன்னலம் அனைத்தும் விட்டுவிடு - வரும்
தடைகள் அனைத்தும் வெட்டிவிடு - நீ
உன்னலம் மறந்து உலக உயிரை
கண்ணின் இமையாய் காத்துவிடு - தோழா
இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு!

துணிவே துணையாய் நினைத்துவிடு - பனித்
துளியாய் துயரை கதிரியிடு - நீ
குனிந்து கிடந்து குற்றம் செய்து
பணிந்து போவதை விட்டுவிடு‍ - புரட்சி
பாதை தெரியுது தொட்டுவிடு!

கவிஞர். புதுவைத் தமிழ் நெஞ்சன்.
புதுச்சேரி.
காரல் மார்க்சின்
மூளைதானம்
மூலதனம்.


ஆறுமுகனே!

பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்।

நின்று போனது
மழையின் வருகை

காடழிப்பு.


தாய்ப்பால் மறக்கடித்து

புட்டிப்பால்

அயல்மொழிக்கல்வி।

நீடிக்கிறது
உரிமைப்போர்

தீவின் தாகம்.


குடி

குடியைக் கெடுக்கும்
பெப்சி ‍-‍கோலா

கள்ளிப்பால்
மறு
சாதிக்கும் பெண்பால்.

கவிதாயினி. கு.அ. தமிழ்மொழி.
புதுச்சேரி.
விலைமகள்

இவள் வியர்வையை விருந்துண்ண‌
காத்திருக்கும் கழுகுகள்
ஏராளம்.

இவள் வாழை இலை வடிவம்
கண்டு, எச்சில் இலையாய்
மாறிப்போனவள்.

இவளொ ஒருவன் கழுத்துக்கு
மாலையாகும் முன்பே
பலரின் உடலுக்கு
போர்வையாகி போனவள்.

இவள் ஒரு சமத்துவபுரஃம்.
இவள் முன் மதங்கள்
மண்டியிட, சாதிகள் சட்டையை
கழட்டிக்கொண்டன.

இவள் உடல் எனும்
காகிதத்தில் ஆண்களின் ஆசைகள்
அச்சுப்பிழைகளாய்.

இவள் இளமை விற்பனைக்கு
என்ற அறிவிப்பால், இவள்
படுக்கை அறயில் தினந்தோறும்
ஆண்களின் சுயம்வரம்.

இவளின் உள்ளத்தை சிதைத்து
உடலை ஊனமாக்கியவள்.ஆம்
இவள் சிறகினை விற்று
பறக்கக் கற்றுக் கொண்டவள்.

-கவிஞர். ரா. பிரேம் சுரேஷ். நீலகிரி.
9751127276


தனி அறை உறங்கலாமா?....


அங்கே! சவக்கிடங்குகளில்சாமரம்


வீசாமல் உலர்ந்து கொன்டிருக்கின்றன‌


உண‌ர்வற்ற உடல்கள்....




உணர்வின்றி காப்பதால்


உயிரோடு இருக்கின்றான்


மதுகலந்த மதியோடு காவல்காரன்...




உடல் தந்துஉயிர் தரும்


மாதுக்கள்உயிர் விட்ட பின்னரும்


கீறி கிழிக்கப்படுகின்றனர்


இந்தப்பாவம் செய்த பாவிகளால்
உணர்வுகளால் அங்கங்கள்


அல்லோலப் படும் போது


ஏற்றுக்கொண்டு பெருமூச்சுவிட்ட


அவள்களின்உடல்கள்இன்று ஏனோ!


அறுக்கப்படும் போதுஅமைதியாக உறங்குகிறது....




மனித உடலின்சுவை கண்ட


உயிர்கள்அழுகை நடிப்பால்


ஆர்ப்பரித்து கொண்டுஇவர்களை


விட்டு எட்டி நிற்கின்றது....




உணர்வுகளை உமிழ முடியாமல்


மரத்துப்போய் தன் மரணத்தை


ஆராய்வதாய் எண்ணி தனியே!


உற‌ங்குகின்றனர்...




அவர்களுக்கென உள்ள


தனி அறையில்....


பிண அறையில்


நிரந்தர உறக்கத்தோடு...




நாமும் உறங்கலாமா?


இவ்வுலகை விட்டு விட்டு


மனித உணர்வற்ற சடங்களின்


வாழ்வைவிட


இந்த உயிரற்ற சடலங்களொடுஉறங்கலாமா?



முகவை கவிஞர் இளகவி....


9894887705

வயல் எங்கும் கான்கிரீட்.....



சவக்குழியில் வீசப்படும் குழிமணலாய் வயல் பள்ளத்தை நிரப்பும் மணல்
வயலின் விழி நீராய் வழிந்தோடும்
துளி நீரையும் விடாது மூடவரும்.
பொக்லைன் யானை கண்டு
பிலம்பி அழும் வயல் குழந்தை!

நெல் விளைந்த இடத்தில் செங்கல்

கலப்பை இடத்தில் கலவைச்சட்டிகள்
மாட்டு வண்டிப்பாதையில் மணல் லாரிகள்!

நாற்று வயல்களில் நடந்து முடிந்தன‌

நண்டுகளின் நடன ஓட்டம்!


தவளையை துரத்திய தண்ணி பாம்பு

கொத்திதின்ன வந்த கொக்கு கூட்டம்

மொத்தமாய் போனது முந்தாநாள் கட்டிட்த்தில்!


வரப்பை விரும்பி சீவும்
சிமெண்ட்
கலவையை மனமின்றி

திரும்ப திரும்ப துலாவும்

ஈரமில்லா காங்கிரீட் சட்டை

இறக்கப்போகும் வயலுக்கு
அளவு டேப்போடு அலையும் புரோக்கர்கள்...

செத்தவயலின் மீது
செங்கல் கட்டிடமோ!

அடித்த வயலைப்பார்க்க‌

ஆசையுடன் உயர எழும்!!


- கவிஞர் தென்றல்.கோ.சண்முகசுந்தரம்
வெள்ளியங்காடு -9865942319

கவிமழலைகள்.....


அவசர உலகம்

அரைமணிநேரத்தில்

நினைத்த உடன் என்னால்

அழகான குழந்தை

பெற முடியும்...எப்படி?



மனிதங்களுக்கு மறைவு தேவை....

இரண்டுகள் இணையாமல்

இணையான மற்றொன்று....எப்படி?



தனிமையுடன் சுகம் கண்டு

தள்ளாடும் மழலை பெறலாம்

சக்கர உலகில் சாதித்திட

சாத்தியக்கூறு உண்டு.


ஓடும் பேருந்தில்

உட்காரும் இடத்தில்

நடைபயணத்திலும்

நாலுபேர் மத்தியிலும்

சூழ்ந்து நிற்கும் கூட்டத்தினூடே!

சூல் கொள்வதில்

வெட்கமே!இல்லை எனக்கு....



உணர்வுகளின்

மரபணுக்களை

உள்ளுக்குள் வாங்கி

இதயக்கருவரைக்குள்

இளஞ்சூடாய் நிரப்பி....



சிந்தனை வித்துக்களை

சிதறடிக்காமல்

பொத்தி பாதுகாத்து..

தனிமையில் பிரசவித்து

தத்தி...தத்தி

தவழ்ந்து

திக்கி திணறி

குட்டி குட்டி மழலைகள்

அழகழகாய்...



நான் ஈனுகின்ற குழந்தை

புண‌ரும் போதும் இன்பம்

புலரும் போதும் இன்பம்.....



என் எதிரே!

கவிமழலைகள்

அழகாய்.....


- திருமதி.அ.ஸார்ஜான் பேகம்


விருதுநகர்

இயந்திர மனிதன் ....


மேஸ்திரி வேலைக்குத்தான் வந்தானோ!
சின்னப்பையன் சிமெண்ட் வாங்கித்தந்தானோ!


முந்தநாள்‍ காலையில
முழுசா மணலுதான் :சிமெண்டேயில்ல‌
இன்னைக்காவது
ஒன்னுக்கு ஆறு
கலவ போட்டா பரவாயில்லை


சாயங்காலத்துக்குள்ளார ஆசாரி
ச‌ன்னல் சட்டம் கோப்பானோ! இல்ல‌
நாம வீடுபோய் சேர்ந்தபின்தான்
புது எழப்புளியே கேட்பானோ!


புதுவீடுகட்டும்
பொன்னுச்சாமி யோசிச்சான்
பொக்லைன் ஸ்டேரிங் புடிச்சபடி
ஆக்கிரமிப்பில் கட்டியிருந்த
ஒரு மாடிவீட்ட இடிச்சபடி....


- புதுவைபிரபா.
புதுச்சேரி

அக்காலமும் வருமோ.....


பள்ளி செல்லும் பாதையிலே! வெள்ளரிக்காய் முளைச்சிருக்க‌ காட்டுக்காரன் கத்தல காதுல வாங்காம‌ பறிச்சித்தின்ன காலமும் போயி.....

கரிசல்காட்டு
வெள்ளப்பருத்தியின்
காயப்பரிச்சு ‍-
‍பக்குவம உரிச்சு
பாளம் பாளமாக பிரிச்சு-
நா இனிக்க‌
ருசி பார்த்து
தின்ன காலமும் போயி...


விளைஞ்சி நிக்கும் கம்பங்காடு புகுந்து
கதிரப்புடுங்கி உள்ளங்கையில தேச்சி உதிர்த்து..
. உடம்புக்கு உரமாய்
தின்னு
வளர்ந்த காலமும் போயி...


மொச்ச,அவரை,பாசிப்பயிறுன்னு
பலதரப்பட்ட விளைச்சல்கள...
பக்குவமா அம்மா அவிச்சித்தந்தத‌

அருமையா தின்ன காலமும் போயி...


சாக்லெட் மிட்டாய்னு வாய்க்கு கேடாகவும்
அய்ஸ்கிரீம் சாலட்னு உடலுக்கு கேடாகவும்
பான்பராக் பாஸ்ட்புட்டுனு வாழ்க்கைக்கு கேடாகவும்
வாழும் காலம் வந்து நம்மை வாட்டுதே!


- கவிஞர்அ.இளஞாயிறு

9443761307 9865076550

வேலிகள்....


விளையும் பயிர்களை
அடிக்கடி
விலங்குகள் அழித்தன...


வேலி ஒன்று வேண்டியிருந்த‌து
அமைத்தோம் ஒரு வேலி
அருகில் யாரும்
அண்டாத படி...


வேலியின் முட்கள்

வேகமாய் வளர்ந்ததில்

பயிர்களும் கொஞ்சம்

பாதிக்கப்பட்டன...


வேலியை தாண்டின‌

சில வெள்ளாடுகள்

படர்ந்த வேலிக்கும்

பாதிப்பு வராத வரையில்

யாரும் தாண்டட்டும்
எங்கேயும் மேயட்டும்

எங்களுக்கு வேலிதான் முக்கியம்....



- கவிஞர் வடுவூர் சிவ.முரளி

புலிவலம் ‍
98426859

கேள்வி கேட்கும் புத்தர்கள்..

மாட மாளிகை -
கூட கோபுரம்-

அறைகள் நிறைய பணக்காகிதங்கள்

உடல் நிறைய தங்க,வைர,மோதிரங்கள்
போதாக்குறைக்கு கூட பட்டங்கள் பதவிகள்....


வீதிக்கு செல்லக்கூட
விலை உயர்ந்த ஏசிக்கார்கள்
வீதியில் வருவோரை குரைக்க‌
வெளிநாட்டு புதிய ரக நாய்கள்

ஏழைக்குத்தான் விலைவாசி உயர்வுகள்

சாவுன்னா என்ன?
கேள்வி கேட்கும் புத்தர்கள்
....

ஜமீன் வாழ்க்கை-
அதிகார வேட்கை-

துவும் இருந்து
என்ன மனிதா?

பசியில் அழுகும் குழந்தைக்கு

"நூறுக்கு" பால் தர மறுக்கும் மானிடா!


கோடிகள் மீது
புரண்டாலும்-
தெருக்கோடியில் நீ

இருந்தாலும்-
ஒரு நாள் ஒரு பொழுது

ஒரு நொடியில்

வழ்வில் மரணம் உறுதி...


கவிஞர்கவிபெரியசாமி
9943791390

வாழ்க்கை

வாழ்க்கை....
தொடர்வண்டியாய் தொடங்கிய‌
என் வாழ்க்கை பயணம்
நிறுத்தத்தில் நின்று செல்லும்
பேருந்தாய் பயணித்தது
தடைகளை தகர்த்தெறிந்து
என் வாழ்க்கை ப‌ய‌ண‌ம்
எவ‌ரெஸ்ட் சிக‌ர‌த்தில்
ஏணி வைத்து ஏறும் என் முய‌ற்சி
என்றோ! ஒரு நாள் வெற்றிபெறும்...
க‌விஞ‌ர் பா.ஜெய‌க்குமார்
9842639779

பழையது கிடைக்க‌

ஏழையின் வேண்டுதல்

போகிப்பண்டிகை...

சிலைகள் காவலில்

சிறைவைக்கப்பட்டன‌

ஜாதிச்சண்டை....

தெருவெங்கும் மின்னொளி

தேர்தல் பிரச்சாரம்

மின்தட்டுப்பாடு குறித்து...

கவிஞர்.அ.சண்முகப்பாண்டி

9787504708

தாயின் அரவணைப்பு

குழந்தை ஏமாற்றம்

வாயில் ரப்பர்...


சந்தோசமாயிருக்கின்றன‌

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை

பறவைகள்...

அரசியல் அபாயம்

கட்சிகொடிகளில்

சிவப்பு நிறம்...

கவிஞர் மு.குமரன்

9786172423

ரோஜா தோட்டம்

எழுதிவைக்கவெண்டும்

முட்கள் ஜாக்கிரதை.


பசியோடு செத்துப்போனான்

ஊர் கூடித்தூவியது

வாய்க்கரிசி...


வெட்டிச்சாய்க்கப்பட்ட‌

மரத்தினடியில்

செத்துக்கிட ந்தது நிழல்.


தாயின் பிணத்தருகே!

பாலுக்கு அழுகிறது

குண்டு வீச்சில் தப்பியகுழந்தை.


இருட்டு பெண்ணை

ரசித்து உருகுகிறது

எரிகின்ற மெழுகு.

- கவிஞர் வசந்தராஜா.

9486579791


கசப்பான செய்தி

அம்மாவிற்கு

சர்க்கரை வியாதி.



மலர் வளையங்கள்

குவிந்தன‌

பூக்கடைகாரனின் ச‌மாதியில்.


குளிர்சாதன அறைகள்

போக்குமா

மனப்புழுக்கங்களை...?


மின்வெட்டு

இலாபம் ஈட்டித்தந்தது

மெழுகுவர்த்தி கடைகாரருக்கு.


மூன்றெழுத்தில்

ஒரு உயிர்ப்பான கவிதை

காதல்...

- "நீல நிலா"கவிஞர்.செண்பகராஜன்

விருது நகர்.


உருவமற்ற‌
உயிர் மூச்சு
காதல்.


உடலைவிட‌

உள்ளத்தைவிட வலிமையானது

தன்னம்பிக்கை.


சுகமான‌

சுமையது

கர்ப்பம்.


உலகப் பொதுமருந்து

சோகத்தைதீர்க்க‌

கண்ணீர்துளிகள்


கவிஞர்.இரவிந்தராசு
9443758743