பல மணிமேகலை.....


இறைவன் படைப்பிலே!வந்த மாற்றமோ!இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனைய
களைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......

விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....

கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
கவிஞர் கோபிநாத்ராஜா
இராமநாதபுரம் -9894887705

எனக்கு முன்னால்


எனக்கு பின்னால்
என்னவாகி இருந்தேன் நான்?
அறியத் துடிக்கிறது தான்
மனசு !


பிரமாண்ட வெளியுள் நுழைந்து
துழாவி
ஊடுறுவிய முன்னும் பின்னும்
அகப்படாமல்
அவஸ்தையுடன் வெளியேறியது
ஞானம்॥!


எனக்கு பின்னால்
என்னவாகி இருந்தால் என்ன?
எனக்கு முன்னால்
என்னைத் துளைக்கும் பசிக்கு
எனக்கு சொல்வேன்
இப்போது....?

கா.அமீர்ஜான்-திருநின்றவூர்

புறத்தின் வினா?


இனி
விரியப்போவதில்லை
தாமரை இதழ்கள்...
விரிவடையப் போகிறது
புறநகர்கள்...


சுரண்டும்
சூழ்ச்சிகளைச் சுமக்கும் எடுபிடிகளை
கைக் குலுக்கி வரவேற்பதில்
உதிர்ந்துபோகும் இலைகள்
என்பதில்.....


வலிய
விரிவடையும் முயலும் இருளை
முடக்குவதாகச் சொல்லும்
சூரியனும்
ந்ம்பகத்தன்மை இழந்ததில்
வருந்த வேண்டியிருக்கிறது
நம்பிக்கெட்ட மனம்....


அடிவானச் சிவப்பையும்
கீழ்வானச்சிவப்பையும் குழைத்து
யாருக்குமான விடியலுக்கும்
புறப்படத் தொடருகையில்
நாற்காலிகளுக்காக எதன்முன்னும்
நெளிய விடுகிறது
புன்முறுவல்....


சம்பவங்கள் முன்
இப்போது
நாம் என்பது
யாரெனத் தெளிந்துக் கொள்ள
விழைகிறது
அகத்தில் தோன்றும் புறத்தின் வினா?
கா।அமீர்ஜான்-திருநின்றவூர்

ரங்கோலி......


காஷ்மீரத்து கம்பளமோ?
சாலையில் தொப்பி வைத்த முல்லை மோட்டோ?
காலையில் பூத்த மல்லிகையோ?
ந்ந்தவனத்தில் மலர்ந்த பூங்கொத்துக்களோ?
சின்ன சித்திரமோ?
சிங்கார ஓவியமோ?
ஆழ்கடலின் நல்முத்தோ?
பளபளக்கும் பவளப்பாறையோ?
கோலம் வரைந்த கோதையோ?
கோலத்தில் தெரிவது உன் கைத்திறமையோ?
கற்பனையின் உயிர்துடிப்பா?
கலைத்தாயின் காவியமோ புத்தாண்டிற்கு
பெ.மகேஷ்வரி
மதுரை-9894597989

மீனவர்கள் மனக்குமுறல்....


மீனவர்கள் மனக்குமுறல்....
நாகை மீனவர்கள் நடுகடலில் மீன்பிடிக்க
யாரும் தடை போடல் ஆகாது-ஆகையினால்
சிங்களத்து ராணுவமும் தீங்கிழைத்தால் நாமெதிர்ப்போம்
பொங்கும் கடலதனைப் போல்...!

கச்சத்தீவதனை கண்ணியமாய் சிங்களர்களுக்குப்
பிச்சைக் கொடுத்த்துதான் பெரும் பிழையோ-அச்சமின்றி
மீன்பிடிக்கத் தடைவிதித்தால் மீண்டுமத் தீவினையே
நாம் பிடிப்போம் பொய்யில்லை நம்பு...!


புலிப்படையைப்போல் நாங்கள் போர்க்கருவி தூக்கிடவோ!
சலிப்படையோம் துரோகிகளை சாகடிப்போம்- எலிப்புழையாய்
பானைக்குல் இருந்து பயங்காட்டும் சிங்களரே!
யானைக்கு முன் எதிர்ப்போர் யார்...!

அமைதி வேண்டும்.....
அமைதி நிலவ வேண்டும்-ஈழம்
அன்பில் மகிழ வேண்டும்
இமைகள் மூடப்பயந்த-தமிழர்கள்
இனிதே உறங்க வேண்டும்
குண்டு சத்தம் ஓய்ந்து-நாட்டில்
குருவி பறக்க வேண்டும்
நண்டுபோல் வளைக்குள்-பதுங்கும்
நடுக்கம் மறைய வேண்டும்।


ஜப்பான் நாட்டில் வீழ்ந்த –குண்டில்
நான்கு மடங்கும் மேலாய்
யாழ்ப்பான நாட்டில் வீழ்ந்தால்-மக்கள்
நிலமை என்ன சொல்வேன்
புலியும் அரசும் கோடிப் பேசி
போரை நிறுத்த வேண்டும்
வலியும் ரணமும் நீங்கி –மக்கள்
வாழ்வு திரும்ப வேண்டும்।

குடந்தை பரிபூரணன்-
கும்பகோணம்0435-2471100

நிம்மதியான நித்திலம் காண்பது எப்போது....


கழுபிணியும் தயமைத்தனமும்
அழுகுரலும் அவலநிலையும் மறைந்து
ஈழத்தமிழர் இனிய வாழ்வில்
ஈடில்லா மகிழ்ச்சி மலர்வது எப்போது
சுதந்திர மூச்சை சுவாசன் செய்ய
இயந்திரமாஇப் போராடிய
தூயத்தலைவரின் இதயத்தாசை
துடிப்புடன் நிறைவேறியது -இன்றோ
யிரம் கேள்விகள் அம்பாய் துளைக்க
அடுத்தது என்ன? நடக்குமோவென
அச்சமுறும் துச்ச நிலை;
நிலையான நிம்மதிக்காக
நித்தமும் நிலைகுலையும்
நிலையில் -
தேவையில்லாமல்
தொலைக்காட்சித் தொடரில் வாழ்வைத்
தொலைக்காமல்......
தொகைக்காக -
பகை உணர்வுமிக்க வெளிநாடு செல்லாமல்
தகைமைசால் உணர்வோடும்
தளராத நெஞ்சத்துறுதியோடும்
துளிர்விடும் போதே தளிர்களின் மனதில்
தொண்டுள்ளத்தை வளர்க்க வேண்டும்....
பணம் சம்பாதிக்க பாதகச் செயல்களுடன்
பிணம் தின்னிக் கழுகுகளாய்
மக்களாஇ பிடிங்கி த்தின்னும் பிசாசுகள் ஒருபுற்ம்
ஒடுங்கியே போனது ஒழுக்க நிம்மதியும்
ஒரு கணம் உலக நிலை நினைத்தால்
பூரணமான புது உலகினை
வரும் புத்தாண்டில்லாவது பூரிப்புடன்
நாம் காண்போமா?

கவிதாயினிகலைத்தாமரை-மதுரை

சூரியத்துகள்...

நடந்து கொண்டே இருப்பேன்
நாட்கள் நகரும்போது
கால்கள் துவண்டாலும்
இலக்கை அடையும் வரை!...


இருட்டாய் இருந்தாலும்
வெளிச்சம் நோக்கி!
குளிராய் இருந்தாலும்
வெப்பம் நோக்கி!

சூரியனை நோக்கி
செல்லும் பயனத்தில்
விட்டிலாகி
வீழ்ந்துடுவேன் என்றாலும்
எரிந்து போனாலும்
சேர்ந்திடுவேன்
ஒரு சூரியத்துகளாய்....
கவிஞர்அருணாச்சலசிவா
சென்னை-9884398283

என்ன செய்யப் போகிறாய்?

ஏழுமலை
ஏழுகடல் தாண்டி
இருண்ட குகைக்குள்
இருந்த பேழையினுள்
ஒளித்து வைத்த
என் உயிர் எப்படி
சிக்கியது?
உருட்டி விளையாட
உன் கைகளில்

கொடுத்தற்கான அடையாளங்கள்
என்னிடம்
ஏதுமில்லை...


வாங்கியதற்கான
அடையாளங்களை
என்ன செய்யப் போகிறாய்?

கவிஞர்யாழி
9976350636

காதல் கவிதை.....

உயிருக்குள்
மின்னோட்டம்
உன்னைச் சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்....


எதுவுமே
ஈடாவதில்லை
உன் ஓரப்பார்வைக்கு....

எனக்கு

என்னிடம் பிடித்தது
உன்னை எழுதுவது


மனம் முழுவதும்
மலர்களின் நறுமணம்
காதல் நினைவுகள்

என்ன புண்ணியம் செய்ததோ!
கடற்கரை மணல்
உன் பாதங்களை சுமப்பதற்கு....

கவிஞர்.கிருஷ்ணமூர்த்தி
செலம்-9942666936

உள்ளங்கைக்குள் உலகம்

கிளிகளிடம்
உன் எதிர்காலத்தை கேட்பதை கைவிடு
அதன் வாழ்க்கையே நெல்லுக்கு
சிறைப்பட்டுக் கிடக்கிறது...


கிழக்கே வெளுக்கும் முன்னே!
நீ விழித்தெழ உன்
கண் ஒளிட்டே!
இந்த உலகம் விடியட்டும்
ஆறுவழிப்பாதையில் முதல் பாதை
நடைபாதை அதில் நம்பிக்கை நடைபோடு
வான்வழிப்பதையில்
உலகை வலம் வரலாம்....
உன் வருகைக்கு காத்திருக்கிறது
நட்சத்திரக்கூட்டம்.....
நீ எப்படி பிடித்தாலும்
மேல் நோக்கியே எறியும் நெருப்பு
இறக்கும் தருவாயில் கூட
நிமிர்ந்தே நிற்கும் தீ...


வாழும் போதே!
ஏன்?
தோல்விகளுக்கு
தலை குனிகிறாய் நீ!
உலகைவெல்ல நீ தகுதி உள்ளவன் என்று
பிறக்கும் போதே பிம்பம் விழுந்திருக்கிறது.....

உழைப்பால் உயரப் பழகு
உள்ளங்கைகுள் உலகம்
வசப்படும்..


சி.செல்வகுமார்
வெள்ளலூர்-9360501589