உயிர் தீயாகும் நீ....

அடர்ந்த இருட்டிலும்
நிழலானாய்...
ஆழ்ந்த நிசப்தத்திலும்..
காற்றசைவாகினாய்...
என் மனக்குரலின் கவிதையாகி
என்னுள் உயிர் தீயாகியும்
நின்றாய் நீ.
தமிழே !

‍கவிதாயினி. மதி.
குறிஞ்சிப்பாடி.

9715969189.
ஊனம் ஒரு நல் அழகே!

படைப்புகளில் இவர்கள் வித்தியாசம்
என்பதால், ஊனத்திலும் இவர்கள்
சாதனையாளர்கள் என்பதால்
ஊனமும் ஒரு நல் அழகே.

பலவீனம் உடல் உறுப்புகளில்
ஆனால் பலமோ மனதில்
சிந்தை பலத்தால் ஜெயித்துக் காடுவதால்
ஊனம் ஒரு நல் அழகே!

கண் இல்லாமல் பார்க்கிறார்கள்
செவிப்பலம் இன்றிக் கேட்கிறார்கள்
பாஷை இல்லாமல் பேசுகிறார்கள்
பலம் இல்லாம்லேயே வாழ்கிறார்கள்.

கரங்கள் இன்றி படைக்கிறார்கள்
சிறகு இன்றி சிந்தையால் பறக்கிறார்கள்
கால்கள் இல்லாமல் நடக்கிறார்கள்
வாழ்வு இழந்தும் வாழ்கிறார்கள்

அசாதாரண வாழ்வு வாழ்வதால்
பிறர் சந்தோஷத்தில் தம் சந்தோஷத்தை
காண்பதால், குறையை நிறைவாய்
கொள்வதால் இவர்களும் அழகே.

இறை அருள் இருக்கும்வரை
நல்ல பெற்றோர் இருக்கும்வரை
அருமையான உறவுகள் இருக்கும்வரை
இனிய உடன்பிறப்புகள் இருக்கும்வரை

வழிநடத்தும் ஆசான்கள் உள்ளவரை
உயிர்தரும் நண்பர்கள் உள்ளவரை
வழிகாட்டும் வள்ளல்கள் உள்ளவரை
ஊனத்தை மதிக்கும் உள்ளங்கள் உள்ளவரை

ஊனம் ஒரு நல் அழகே!
உரிய உரிமைகளை தந்து
சமூகம் இவர்களை அங்கீகரித்தால்
ஊனமும் ஒரு நல் அழகே!

உற்றுப்பார்த்தால் ஒளிந்திருக்கும்
திறமைகள் திரியும் உயர்வு தந்து
பார்த்தால் ஊனத்தின் உன்னதம் புரியும்
ஊனமும் ஒரு நல் அழகே புரியும்.

-கவிதாயினி। சாந்தி ராபர்ட்ஸ்
உதகை.

மலர்கள்

அரும்புகளில் மட்டுமின்றி அந்திமக்காலம் வரை
அழகழகாய்த் தோன்றி அசத்தும் அபூர்வங்கள்.

கடவுச்சீட்டாக காதலர்க்குப் பயன்படினும்
கடவுளரின் பூசனைக்கும் கடன்பட்டவைகள்


வண்ணங்களாலும் வடிவங்களாலும் வழிமறந்து
வாண்டுகளை வசீகரிக்கும் வரவேற்பு வளைவுகள்

இனவிருத்திக்கு இடம்கொடுக்கும் இயல்பினினால்
இம்மியளவும் மனவருத்தமின்றி மறைபவைகள்

வாடிஉதிரும் வரை வாசம் வீசும் வழக்கத்தினை
வாடிக்கையாய் வைத்து வாழ்ந்து காட்டுபவைகள்


கவிஞர்களின் கற்பனைக்குக் கைகொடுப்பதோ
கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்படுபவைகள்

மனிதர்களின் மரணத்துக்கு மெளனாஞ்சலி செலுத்த‌
மணிக்கணிக்கில் காத்திருக்கும் புனித ஆத்மாக்கள்

சுபகாரியங்களிலும் சுற்றாத்தார் போல் வந்து
சுற்றிச்சுழன்றபடி சுகராகம் பாடுபவைகள்

இறைவனுக்கும் புலவனுக்கும் இடையே வந்து
இலக்கண சர்ச்சைக்கு இலக்கானவைகள்

மென்மையிலே மெல்லியலார்க்கு உவமையானாலும்
மென்மேலும் மே(தி)னியை மேன்மைப்படுத்துபவைகள்.


கவிஞர்। கலைமதிராஜன்.
கோவை.

9842535675

அம்மா!

'வாரமொரு முறை கடிதம்'
'மாதமொரு முறை பணவிடை'

'அடிக்கடி தொலைபேசி உரையாடல்' இவை முழுவதுமாய் மறந்த
நினைவை

அவசரமாய் நினைவூட்டுகிறது

அம்மாவின் மரணம் குறித்தான்
முதியோர் இல்லத் தந்தி!


கவிஞர்। கன்னிக் கோயில் இராஜா
சென்னை
9841236965

தேடல்!

காலை முதல் மாலைவரை
பல வீடுகளில் வேலை செய்துவரும்

அம்மவின் மாதசம்பளத்தில்

அனைத்து செலவுகளையும் மீறி

சேரும் பணத்தை ஒளித்து வப்பாள்

சாமி படத்திற்கு பின்னால்!

''எளிதாய் எடுத்து குடிக்க வழியில்லாமல்

தேடி எடுக்க வைக்கிறாயே?'' என‌

கோபத்தில் அடிப்பார் அப்பா!


ஒரு நாளும் தேடியதில்லை

வேலையை மட்டும்!
‍

கவிஞர்। கன்னிக்கோவில் இராஜா.
சென்னை.
9841236965

பசியை விரட்டும்
கடவுள்
உழவன்

சிறிய பெட்டிக்குள்
தூஙகும் அக்னி
தீக்குச்சி


ஆசை தோன்றி

மரணம் வந்தது
எய்ட்ஸ்


தொட்டி கட்டினேன்
மழை பொழியவில்லை
நீர் சேகரிப்பு

துலைத்து விட்டேன்

கண்டுபிடித்து தாருங்கள்
சந்தோஷம்

ஒவ்வொரு வீட்டிலும்

இறைவன் வாழ்கிறார்கள்
பெற்றோர்


மழை தந்த‌

அன்பளிப்பு
வெள்ள நிவாரணம்


அக்காவுக்காக

தங்கை மறைந்துக்கொண்டாள்

பெண்பார்க்கும் படலம்.

வீரர்கள் அழவில்லை

ரசிகர்கள் அழுதனர்

இந்தியா தோல்வி.


மெளனமாய் நின்றேன்
அழகாய் பாடியது

தேசிய கீதம்।

கவிஞர். திருசிற்றம்பலம் சுரேஷ்.

கடலூர்.
9944745781

உணர்ந்து கொள்ளாமல்.....

உணர்ந்து கொள்ளாமல்
பகிர்ந்து கொள்கிறார்கள்
ஹேப்பி பொங்கல் என்று....
தமிழ்தாய் அழுது புழம்புகின்றாள்
என்று மாறும் என்று....
தானாய் மாறும் என்பதெல்லாம்
பழைய பொய்யடா....
என் தமிழ் மகனே!நீ
மாற்றிக்காட்டடா!
கவிஞர்எழில்கதிர்
9788784921