
கோடிக்கால் பூதம்...
இலக்கு
இன்னும் வெகுதூரம்....
வெட்ட வெளி...
நெடும்பாலை...
காலை விட்டு
ஓடத்துடிக்கும்
செருப்பு...
செருப்புக்கும் காலுக்கும்
இடை புகுந்து
உறுத்தும்மணல்....
அவ்வப்போது வீசும்
மணற்காற்று...
ஆனாலும் பயணம்
தொடர்கிறது...
தடைகளை தகர்த்து
இலக்கை அடைந்தே
தீரும்
கோடிக்கால் பூதம்...
கவிஞர்அய்ந்திறன் (மு.இராஜராம்)
அருப்புக்கோட்டை
அலைபேசி எண்: 9443731165