இழப்புகள்......

நெடுஞ்சாலை விரிவாக்கத்தில்
இடிபடும் வீடுகளில்
என்வீடும் சிக்குண்டது ‍-
அதிர்ஷ்டமா ? துரதிர்ஷ்டமா?
எனக்குத் தெரியவில்லை.

ஆனால்,
பாடப்புத்தகத்தில்

மயிலிறகைப் பாதுகாத்தபடி,
குட்டிகளுக்காகத் தவமிருக்கும்

என் செல்ல மகளுக்கு,
அந்த தினம்
கருப்பு தினம்தான்.

ஆசைப்பூனை

சுருண்டுப் படுத்த மூலை,

சுவற்றுக்கிறுக்கல் சுவடுகள்,

ஒளிந்து விளையாடிய‌

கதவுகளின் மறைப்புகளென‌

கூடுதல் இழப்புகளை

சுமக்கும் அவளை

என்ன சொல்லித் தேற்று்வேன்.....?

ஏகலைவன்
சேலம்.
9944391668
செம்மொழிக்கிணையான‌
செவ்வியல் மொழி
மழலை மொழி.

விளையாட்டுபகரணங்கள்
நடுவில் தேவதூதன்
குழந்தை.

- ஏகலைவன்
சேலம்.
9944391668

சட்டைப்பையை பார்த்தபிறகு
சட்டம்கூட இருட்டானது
குற்றவாளியும் நிரபராதி.

பசித்தவன் வயிறு
பற்றி எரிகிறது
சாக்கடையில் சாதம்.

சிரித்து மகிழ்ந்தபடி
பிரிந்தது உயிர்
கைப்பேசியுடனான பயணம்.


-
பொன்னார்
மணப்பாறை. திருச்சி.
9965614052.



அன்னதானம் !
வீட்டுக் கூரையில்
அள்ளிப் போட்ட
ஒருபிடிச் சோறு

தன்னந்தனியே
தின்றதாய் இல்லை
வரலாறு
ஒட்டிய வயிற்றுக்கு
ஒருபிடி சோறு தேடும்
சிறுமியே ...
காக்கையிடம் போய்
கையேந்து !

- உழவன்
மின்னஞ்சல் : tamil.uzhavan@gmail.com

ஆதியந்தமாய்....

நினைத்து உருகி
உன்னிலேதான் கரைகிறேன்
புரியாமல் நீயோ
என் தூரிகைத் தொடா

தொடுவானமாய்..!


அங்கிங்கெனாதபடி என்னுள்

ஆதியந்தமாய் நீ

விழிமூடியும் மனமுறங்காது

கசிகிறது ‍- உன்
வனப்பில்...!

கனந்தாங்காது

சுகமாய்
பிரசவிக்கிறேன்
தமிழே - உனை
ஓர் கவிதையாய்....!


- மதி (கற்பகஜோதி)

9715969189.