தூசுத் தட்டப்படாமல்
ஏக்கத்தோடு
நூலகத்தில்
புத்தகங்கள்.

வானவீதியில்

கண்டன ஆர்பாட்டம்
கார்மேகம்.

கோடையில் வழிந்தோடும்
வற்றாத ஜீவநதி...
வியர்வை

ஒளிரும் மகிழ்வில்
ஆனந்தக் கண்ணீர்
எரியும் மெழுகுவர்த்தி.

காமனோடு
காலன்
உருவாக்கிய கூட்டணி
எய்ட்ஸ்

தரிசாய் ஆவது
இவர்களின் வாழ்வும் தான்..
முதிர்கன்னி.

- ஈழக்கவிதாசன். மா. ஞானசூரி.

No comments: