இழப்புகள்......

நெடுஞ்சாலை விரிவாக்கத்தில்
இடிபடும் வீடுகளில்
என்வீடும் சிக்குண்டது ‍-
அதிர்ஷ்டமா ? துரதிர்ஷ்டமா?
எனக்குத் தெரியவில்லை.

ஆனால்,
பாடப்புத்தகத்தில்

மயிலிறகைப் பாதுகாத்தபடி,
குட்டிகளுக்காகத் தவமிருக்கும்

என் செல்ல மகளுக்கு,
அந்த தினம்
கருப்பு தினம்தான்.

ஆசைப்பூனை

சுருண்டுப் படுத்த மூலை,

சுவற்றுக்கிறுக்கல் சுவடுகள்,

ஒளிந்து விளையாடிய‌

கதவுகளின் மறைப்புகளென‌

கூடுதல் இழப்புகளை

சுமக்கும் அவளை

என்ன சொல்லித் தேற்று்வேன்.....?

ஏகலைவன்
சேலம்.
9944391668

No comments: