புறத்தின் வினா?


இனி
விரியப்போவதில்லை
தாமரை இதழ்கள்...
விரிவடையப் போகிறது
புறநகர்கள்...


சுரண்டும்
சூழ்ச்சிகளைச் சுமக்கும் எடுபிடிகளை
கைக் குலுக்கி வரவேற்பதில்
உதிர்ந்துபோகும் இலைகள்
என்பதில்.....


வலிய
விரிவடையும் முயலும் இருளை
முடக்குவதாகச் சொல்லும்
சூரியனும்
ந்ம்பகத்தன்மை இழந்ததில்
வருந்த வேண்டியிருக்கிறது
நம்பிக்கெட்ட மனம்....


அடிவானச் சிவப்பையும்
கீழ்வானச்சிவப்பையும் குழைத்து
யாருக்குமான விடியலுக்கும்
புறப்படத் தொடருகையில்
நாற்காலிகளுக்காக எதன்முன்னும்
நெளிய விடுகிறது
புன்முறுவல்....


சம்பவங்கள் முன்
இப்போது
நாம் என்பது
யாரெனத் தெளிந்துக் கொள்ள
விழைகிறது
அகத்தில் தோன்றும் புறத்தின் வினா?
கா।அமீர்ஜான்-திருநின்றவூர்

No comments: