மீனவர்கள் மனக்குமுறல்....


மீனவர்கள் மனக்குமுறல்....
நாகை மீனவர்கள் நடுகடலில் மீன்பிடிக்க
யாரும் தடை போடல் ஆகாது-ஆகையினால்
சிங்களத்து ராணுவமும் தீங்கிழைத்தால் நாமெதிர்ப்போம்
பொங்கும் கடலதனைப் போல்...!

கச்சத்தீவதனை கண்ணியமாய் சிங்களர்களுக்குப்
பிச்சைக் கொடுத்த்துதான் பெரும் பிழையோ-அச்சமின்றி
மீன்பிடிக்கத் தடைவிதித்தால் மீண்டுமத் தீவினையே
நாம் பிடிப்போம் பொய்யில்லை நம்பு...!


புலிப்படையைப்போல் நாங்கள் போர்க்கருவி தூக்கிடவோ!
சலிப்படையோம் துரோகிகளை சாகடிப்போம்- எலிப்புழையாய்
பானைக்குல் இருந்து பயங்காட்டும் சிங்களரே!
யானைக்கு முன் எதிர்ப்போர் யார்...!

அமைதி வேண்டும்.....
அமைதி நிலவ வேண்டும்-ஈழம்
அன்பில் மகிழ வேண்டும்
இமைகள் மூடப்பயந்த-தமிழர்கள்
இனிதே உறங்க வேண்டும்
குண்டு சத்தம் ஓய்ந்து-நாட்டில்
குருவி பறக்க வேண்டும்
நண்டுபோல் வளைக்குள்-பதுங்கும்
நடுக்கம் மறைய வேண்டும்।


ஜப்பான் நாட்டில் வீழ்ந்த –குண்டில்
நான்கு மடங்கும் மேலாய்
யாழ்ப்பான நாட்டில் வீழ்ந்தால்-மக்கள்
நிலமை என்ன சொல்வேன்
புலியும் அரசும் கோடிப் பேசி
போரை நிறுத்த வேண்டும்
வலியும் ரணமும் நீங்கி –மக்கள்
வாழ்வு திரும்ப வேண்டும்।

குடந்தை பரிபூரணன்-
கும்பகோணம்0435-2471100

No comments: