இயந்திர மனிதன் ....


மேஸ்திரி வேலைக்குத்தான் வந்தானோ!
சின்னப்பையன் சிமெண்ட் வாங்கித்தந்தானோ!


முந்தநாள்‍ காலையில
முழுசா மணலுதான் :சிமெண்டேயில்ல‌
இன்னைக்காவது
ஒன்னுக்கு ஆறு
கலவ போட்டா பரவாயில்லை


சாயங்காலத்துக்குள்ளார ஆசாரி
ச‌ன்னல் சட்டம் கோப்பானோ! இல்ல‌
நாம வீடுபோய் சேர்ந்தபின்தான்
புது எழப்புளியே கேட்பானோ!


புதுவீடுகட்டும்
பொன்னுச்சாமி யோசிச்சான்
பொக்லைன் ஸ்டேரிங் புடிச்சபடி
ஆக்கிரமிப்பில் கட்டியிருந்த
ஒரு மாடிவீட்ட இடிச்சபடி....


- புதுவைபிரபா.
புதுச்சேரி

No comments: