வேலிகள்....


விளையும் பயிர்களை
அடிக்கடி
விலங்குகள் அழித்தன...


வேலி ஒன்று வேண்டியிருந்த‌து
அமைத்தோம் ஒரு வேலி
அருகில் யாரும்
அண்டாத படி...


வேலியின் முட்கள்

வேகமாய் வளர்ந்ததில்

பயிர்களும் கொஞ்சம்

பாதிக்கப்பட்டன...


வேலியை தாண்டின‌

சில வெள்ளாடுகள்

படர்ந்த வேலிக்கும்

பாதிப்பு வராத வரையில்

யாரும் தாண்டட்டும்
எங்கேயும் மேயட்டும்

எங்களுக்கு வேலிதான் முக்கியம்....- கவிஞர் வடுவூர் சிவ.முரளி

புலிவலம் ‍
98426859

No comments: