விலைமகள்

இவள் வியர்வையை விருந்துண்ண‌
காத்திருக்கும் கழுகுகள்
ஏராளம்.

இவள் வாழை இலை வடிவம்
கண்டு, எச்சில் இலையாய்
மாறிப்போனவள்.

இவளொ ஒருவன் கழுத்துக்கு
மாலையாகும் முன்பே
பலரின் உடலுக்கு
போர்வையாகி போனவள்.

இவள் ஒரு சமத்துவபுரஃம்.
இவள் முன் மதங்கள்
மண்டியிட, சாதிகள் சட்டையை
கழட்டிக்கொண்டன.

இவள் உடல் எனும்
காகிதத்தில் ஆண்களின் ஆசைகள்
அச்சுப்பிழைகளாய்.

இவள் இளமை விற்பனைக்கு
என்ற அறிவிப்பால், இவள்
படுக்கை அறயில் தினந்தோறும்
ஆண்களின் சுயம்வரம்.

இவளின் உள்ளத்தை சிதைத்து
உடலை ஊனமாக்கியவள்.ஆம்
இவள் சிறகினை விற்று
பறக்கக் கற்றுக் கொண்டவள்.

-கவிஞர். ரா. பிரேம் சுரேஷ். நீலகிரி.
9751127276


No comments: