அக்காலமும் வருமோ.....


பள்ளி செல்லும் பாதையிலே! வெள்ளரிக்காய் முளைச்சிருக்க‌ காட்டுக்காரன் கத்தல காதுல வாங்காம‌ பறிச்சித்தின்ன காலமும் போயி.....

கரிசல்காட்டு
வெள்ளப்பருத்தியின்
காயப்பரிச்சு ‍-
‍பக்குவம உரிச்சு
பாளம் பாளமாக பிரிச்சு-
நா இனிக்க‌
ருசி பார்த்து
தின்ன காலமும் போயி...


விளைஞ்சி நிக்கும் கம்பங்காடு புகுந்து
கதிரப்புடுங்கி உள்ளங்கையில தேச்சி உதிர்த்து..
. உடம்புக்கு உரமாய்
தின்னு
வளர்ந்த காலமும் போயி...


மொச்ச,அவரை,பாசிப்பயிறுன்னு
பலதரப்பட்ட விளைச்சல்கள...
பக்குவமா அம்மா அவிச்சித்தந்தத‌

அருமையா தின்ன காலமும் போயி...


சாக்லெட் மிட்டாய்னு வாய்க்கு கேடாகவும்
அய்ஸ்கிரீம் சாலட்னு உடலுக்கு கேடாகவும்
பான்பராக் பாஸ்ட்புட்டுனு வாழ்க்கைக்கு கேடாகவும்
வாழும் காலம் வந்து நம்மை வாட்டுதே!


- கவிஞர்அ.இளஞாயிறு

9443761307 9865076550

No comments: