தமிழா ! இன உணர்வு கொள்.

எழு! எழு! தமிழா விடிவுண்டு - உன்
எதிரிக் கதனால் முடிவுண்டு ‍ - உன்
தொழுத ககளை தூக்கி நிறுத்து
பழுதெலாம் பறக்க சிறகுண்டு - முப்
படையும் போகும் சிதருண்டு!

உனக்குள் உறுதி முளைக்கட்டும் - அதனால்
உரிமைத் தமிழ்நிலம் கிளைக்கட்டும் - அன்றே
பகையும், இரண்டகம் பதுங்கி ஓடும்
மனத்தில் இன்பம் கலைக்கட்டும் ‍ - உன்
மானப் போரில் கதிரெட்டும்!

தன்னலம் அனைத்தும் விட்டுவிடு - வரும்
தடைகள் அனைத்தும் வெட்டிவிடு - நீ
உன்னலம் மறந்து உலக உயிரை
கண்ணின் இமையாய் காத்துவிடு - தோழா
இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு!

துணிவே துணையாய் நினைத்துவிடு - பனித்
துளியாய் துயரை கதிரியிடு - நீ
குனிந்து கிடந்து குற்றம் செய்து
பணிந்து போவதை விட்டுவிடு‍ - புரட்சி
பாதை தெரியுது தொட்டுவிடு!

கவிஞர். புதுவைத் தமிழ் நெஞ்சன்.
புதுச்சேரி.

No comments: