மலர்கள்

அரும்புகளில் மட்டுமின்றி அந்திமக்காலம் வரை
அழகழகாய்த் தோன்றி அசத்தும் அபூர்வங்கள்.

கடவுச்சீட்டாக காதலர்க்குப் பயன்படினும்
கடவுளரின் பூசனைக்கும் கடன்பட்டவைகள்


வண்ணங்களாலும் வடிவங்களாலும் வழிமறந்து
வாண்டுகளை வசீகரிக்கும் வரவேற்பு வளைவுகள்

இனவிருத்திக்கு இடம்கொடுக்கும் இயல்பினினால்
இம்மியளவும் மனவருத்தமின்றி மறைபவைகள்

வாடிஉதிரும் வரை வாசம் வீசும் வழக்கத்தினை
வாடிக்கையாய் வைத்து வாழ்ந்து காட்டுபவைகள்


கவிஞர்களின் கற்பனைக்குக் கைகொடுப்பதோ
கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்படுபவைகள்

மனிதர்களின் மரணத்துக்கு மெளனாஞ்சலி செலுத்த‌
மணிக்கணிக்கில் காத்திருக்கும் புனித ஆத்மாக்கள்

சுபகாரியங்களிலும் சுற்றாத்தார் போல் வந்து
சுற்றிச்சுழன்றபடி சுகராகம் பாடுபவைகள்

இறைவனுக்கும் புலவனுக்கும் இடையே வந்து
இலக்கண சர்ச்சைக்கு இலக்கானவைகள்

மென்மையிலே மெல்லியலார்க்கு உவமையானாலும்
மென்மேலும் மே(தி)னியை மேன்மைப்படுத்துபவைகள்.


கவிஞர்। கலைமதிராஜன்.
கோவை.

9842535675

No comments: