கவிமழலைகள்.....


அவசர உலகம்

அரைமணிநேரத்தில்

நினைத்த உடன் என்னால்

அழகான குழந்தை

பெற முடியும்...எப்படி?மனிதங்களுக்கு மறைவு தேவை....

இரண்டுகள் இணையாமல்

இணையான மற்றொன்று....எப்படி?தனிமையுடன் சுகம் கண்டு

தள்ளாடும் மழலை பெறலாம்

சக்கர உலகில் சாதித்திட

சாத்தியக்கூறு உண்டு.


ஓடும் பேருந்தில்

உட்காரும் இடத்தில்

நடைபயணத்திலும்

நாலுபேர் மத்தியிலும்

சூழ்ந்து நிற்கும் கூட்டத்தினூடே!

சூல் கொள்வதில்

வெட்கமே!இல்லை எனக்கு....உணர்வுகளின்

மரபணுக்களை

உள்ளுக்குள் வாங்கி

இதயக்கருவரைக்குள்

இளஞ்சூடாய் நிரப்பி....சிந்தனை வித்துக்களை

சிதறடிக்காமல்

பொத்தி பாதுகாத்து..

தனிமையில் பிரசவித்து

தத்தி...தத்தி

தவழ்ந்து

திக்கி திணறி

குட்டி குட்டி மழலைகள்

அழகழகாய்...நான் ஈனுகின்ற குழந்தை

புண‌ரும் போதும் இன்பம்

புலரும் போதும் இன்பம்.....என் எதிரே!

கவிமழலைகள்

அழகாய்.....


- திருமதி.அ.ஸார்ஜான் பேகம்


விருதுநகர்

No comments: