வயல் எங்கும் கான்கிரீட்.....சவக்குழியில் வீசப்படும் குழிமணலாய் வயல் பள்ளத்தை நிரப்பும் மணல்
வயலின் விழி நீராய் வழிந்தோடும்
துளி நீரையும் விடாது மூடவரும்.
பொக்லைன் யானை கண்டு
பிலம்பி அழும் வயல் குழந்தை!

நெல் விளைந்த இடத்தில் செங்கல்

கலப்பை இடத்தில் கலவைச்சட்டிகள்
மாட்டு வண்டிப்பாதையில் மணல் லாரிகள்!

நாற்று வயல்களில் நடந்து முடிந்தன‌

நண்டுகளின் நடன ஓட்டம்!


தவளையை துரத்திய தண்ணி பாம்பு

கொத்திதின்ன வந்த கொக்கு கூட்டம்

மொத்தமாய் போனது முந்தாநாள் கட்டிட்த்தில்!


வரப்பை விரும்பி சீவும்
சிமெண்ட்
கலவையை மனமின்றி

திரும்ப திரும்ப துலாவும்

ஈரமில்லா காங்கிரீட் சட்டை

இறக்கப்போகும் வயலுக்கு
அளவு டேப்போடு அலையும் புரோக்கர்கள்...

செத்தவயலின் மீது
செங்கல் கட்டிடமோ!

அடித்த வயலைப்பார்க்க‌

ஆசையுடன் உயர எழும்!!


- கவிஞர் தென்றல்.கோ.சண்முகசுந்தரம்
வெள்ளியங்காடு -9865942319

No comments: